உத்தவ் தாக்கரேவுக்கு எதிரான மனு தள்ளுபடி- மும்பை ஐகோர்ட்டு உத்தரவு


உத்தவ் தாக்கரேவுக்கு எதிரான மனு தள்ளுபடி- மும்பை ஐகோர்ட்டு உத்தரவு
x

உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை மும்பை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

மாவட்ட செய்திகள்

மும்பை,

உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை மும்பை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

ரூ.1 லட்சம் செலுத்த உத்தரவு

மும்பை ஐகோர்ட்டில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுவில் மக்கள் பணியை செய்யாமல் வெளியூரில் இருக்கும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை தலைமைநீதிபதி திபான்கர் தத்தா, எம்.எஸ். கார்னிக் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது நீதிபதிகள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ., மந்திரிகள் அவர்கள் மாநிலத்தில் தான் இருக்க வேண்டும் என சட்டம் இருக்கிறதா என மனுதாரரிடம் கேள்வி எழுப்பினர். உடனே மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், அதுபற்றி ஆய்வு செய்ய நேரம் வேண்டும் என்றார். இதையடுத்து நீதிபதிகள், " இந்த மனு அரசியல் உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டது போல இருக்கிறது. மனுதாரர் எந்தவித ஆய்வும் இல்லாமல் மனுவை தாக்கல் செய்து உள்ளார். எனவே இந்த மனுவை விசாரிக்க மனுதாரர் 2 வாரத்திற்குள் வைப்பு தொகையாக ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும். பணம் செலுத்தப்பட்டால் மனு மீதான விசாரணை 3 வாரங்களுக்கு பிறகு நடைபெறும். பணம் செலுத்தப்படவில்லை எனில் மனு தள்ளுபடி செய்யப்படும் " என கூறினர்.

மனு தள்ளுபடி

இதேபோல உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே, சஞ்சய் ராவத் ஆகியோர் மீது தேசதுரோகம், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என ஹேமந்த் பாட்டீல் என்பவர் தாக்கல் செய்த பொதுநலன் மனுவையும் மும்பை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.


Next Story