குடிபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணியிடை நீக்கம்


குடிபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-25T00:17:34+05:30)

மும்பை,

பால்கர் மாவட்டம் தகானு தாலுகா பகுதி தாமன்காவில் ஷில்லா பரிஷத் தொடக்க பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் சம்பவத்தன்று மதுகுடித்துவிட்டு வந்து உள்ளார். போதையில் பள்ளியில் படுத்து தூங்கிய அவர் மற்ற ஊழியர்களை அவதூறாக பேசி உள்ளார். மேலும் அவர் பள்ளி ஊழியர் ஒருவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. ஆசிரியரின் தகாத நடவடிக்கை குறித்து கல்வித்துறை அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து ஷில்லா பரிஷத் தலைமை நிர்வாக அதிகாரி மதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.


Next Story