பராமரிப்பு பணி காரணமாக செம்பூர், டிராம்பே உள்ளிட்ட இடங்களில் 24 மணி நேரம் குடிநீர் வினியோகம் ரத்து

பராமரிப்பு பணி காரணமாக செம்பூர், டிராம்பே உள்ளிட்ட இடங்களில் 24 மணி நேரத்துக்கு குடிநீர் வினியோகம் ரத்து செய்யபடுகிறது
மும்பை,
மும்பை டிராம்பே நீர்தேக்க நிலையத்தில் பழுது பார்க்கும் பணி மாநகராட்சி சார்பில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கி மறுநாள் 25-ந்தேதி காலை 10 மணி வரையில் 24 மணி நேரம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக எம்.வார்டு கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் குடிநீர் வினியோகம் முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. பாதிக்கப்படும் இடங்களான எம். வார்டு கிழக்கில் பாபா நகர், ஆதர்ஷ் நகர், சிவாஜி நகர், லோட்டஸ்காலனி, கோவண்டி ஸ்டேசன் சாலை, தேவ்னார் முனிசிபல் காலனி, சீத்தாகேம்ப், கோலிவாடா, டிராம்பே, மகாராஷ்ட்ரா நகர், கோவண்டி ஆகிய இடங்களில் குடிநீர் ரத்து அமல்படுத்தப்பட உள்ளது. இதேபோல எம். மேற்கு வார்டு பகுதிகளான லோகண்டே மார்க், சேதாநகர், முகுந்த் நகர், எஸ்.டி.சாலை, செம்பூர், இந்திரா மார்க்கெட், ஷெல்காலனி ரோடு, செம்பூர்நாக்கா, அமர்நகர், கேம்ப், சுமன்நகர், சாய்பாபா நகர் ஆகிய இடங்களில் குடிநீர் ரத்து அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக செலவழித்து ஒத்துழைப்பு வழங்கும்படி மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






