சிவசேனா சட்டமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து ஏக்னாத் ஷிண்டே நீக்கம்


சிவசேனா சட்டமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து ஏக்னாத் ஷிண்டே நீக்கம்
x

சிவசேனா சட்டமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து ஏக்னாத் ஷிண்டே நீக்கப்பட்டுள்ளார்.

மாவட்ட செய்திகள்

மும்பை,

சிவசேனா மூத்த தலைவரும், மந்திரியுமான ஏக்னாத் ஷிண்டே கட்சி தலைமை மீதான அதிருப்தி காரணமாக ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஓட்டலில் முகாமிட்டு உள்ளார். இதையடுத்து மாநிலத்தை ஆளும் சிவசேனா கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் ஏக்னாத் ஷிண்டே சிவசேனாவின் சட்டமன்ற குழு தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மேலும் புதிய சட்டமன்ற குழு தலைவராக அஜய் சவுத்ரி எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல அவர் கட்சியின் கொறடாவாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த பரிந்துரை கடிதத்தை சிவசேனா தலைவர்கள் சட்டசபை துணை சபாநாயகர் நர்ஹாாி ஜிர்லாலிடம் ஒப்படைத்தனர்.


Next Story