சந்திராப்பூரில் புலி தாக்கி முதியவர் பலி
மகாராஷ்டிர மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 60 வயது முதியவர் ஒருவர் புலியால் அடித்துக் கொல்லப்பட்டார்.
சந்திராப்பூர்,
சந்திராப்பூர் சிச்பல்லி வனஎல்கைக்கு உட்பட்ட முல் தாலுகா சிஞ்சடா கிராமத்தை சேர்ந்த முதியவர் சூர்யபன் (வயது60). இவர் நேற்று தனது விளைநிலத்திற்கு சென்ற போது அங்கு புதரில் பதுங்கி இருந்த புலி ஒன்று அவர் மீது பாய்ந்து கடித்து குதறியது. இந்த சம்பவத்தில் முதியவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். இதுபற்றி அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று உயிரிழந்து கிடந்த முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் புலியின் நடமாட்டத்தை அறிய கண்காணிப்பு கேமராவை பொருத்தி உள்ளனர். சந்திராப்பூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் வனவிலங்குகள் தாக்கி 16 பேர் உயிரிழந்து உள்ளனர். இதில் 13 பேர் புலி தாக்குதலில் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
Related Tags :
Next Story