ரூ.33 லட்சம் மின்சாரம் திருடிய கட்டுமான அதிபர் மீது வழக்கு

அம்பர்நாத்,
தானே மாவட்டம் அம்பர்நாத்தை சேர்ந்த கட்டுமான அதிபர் தனக்கு சொந்தமான 3 கட்டுமான கட்டிடத்தில் மின்சாரம் திருடி வருவதாக மின்வாரிய அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இந்த புகாரின் படி அதிகாரிகள் அங்கு சென்று அதிரடி ஆய்வு நடத்தினர். இதில் கடந்த மார்ச் மாதம் நவம்பர் மாதம் வரையில் ரிமோட் கண்ட்ரோல் கருவி மூலம் மின்சாரத்தை திருடியது தெரியவந்தது.
இதன் மூலம் 80 ஆயிரத்து 387 யூனிட் மின்சாரத்தை திருடி ரூ.33 லட்சத்து 43 ஆயிரம் மின்வாரியத்திற்கு இழப்பீடு ஏற்படுத்தியது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






