பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் முறைகேடு- அமலாக்கத்துறை வழக்குப்பதிவு

மும்பை,
அவுரங்காபாத்தில் உள்ள சம்ரத் கட்டுமான நிறுவனம்., இண்டோ குளோபல் இன்ப்ராஸ்ட்ரக்சர் சர்வீசஸ், ஜாகுவார் குளோபல் சர்வீசஸ் மற்றும் அதன் பங்கு நிறுவனங்கள், அவுரங்காபாத்தில் பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 40 ஆயிரம் வீடுகளை கட்டுவதற்கான மாநகராட்சி டெண்டரை சட்டவிரோதமாக பெற்றுள்ளது.
இதுகுறித்து அவுரங்காபாத் மாநகராட்சி கொடுத்து புகாரின் பேரில் அந்த நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான இடத்தில் அமலாகத்துறை சோதனை நடத்தியது. அவுரங்காபாத், புனே மற்றும் அகோலாவில் மொத்தம் 9 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் முறைகேடு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. விசாரணையில் ஒரே ஐ.பி. முகவரியில் இருந்து 3 நிறுவனங்கள் இ-டெண்டருக்கு விண்ணப்பித்தது தெரிவித்துள்ளது. சமரத் கட்டமான நிறுவனத்திற்கு டெண்டர் ஒதுக்கப்பட்டது, ஆனால் அந்த நிறுவனம் வங்கி உத்தரவாதமாக ரூ.46.24 கோடி செலுத்துவதற்கு பதிலாக ரூ.88.60 லட்சத்தை மட்டுமே செலுத்தி உள்ளது.
மேலும் டெண்டரை வென்ற நிறுவனங்களுக்கு இவ்வளவு பெரிய திட்டத்தை செயல்படுத்த பொருளாதார ரீதியாக தகுதியில்லை என கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அமலாக்கத்துறை இந்த வழக்கில் பண மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது.






