ஓசூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு மும்பையில் பதுங்கி இருந்த கொள்ளையன் சிக்கினான்


ஓசூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு மும்பையில் பதுங்கி இருந்த கொள்ளையன் சிக்கினான்
x
தினத்தந்தி 14 Sept 2023 1:30 AM IST (Updated: 14 Sept 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் வழிப்பறியில் ஈடுபட்டு மும்பையில் பதுங்கி இருந்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

ஓசூரில் வழிப்பறியில் ஈடுபட்டு மும்பையில் பதுங்கி இருந்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

ஈரானிய கொள்ளையர்கள்

இந்தியாவில் பல்வேறு இடங்களில் வழிப்பறி மற்றும் பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பி கொள்ளையில் ஈடுபடுவதில் மும்பையில் வசிக்கும் ஈரானிய கொள்ளையர்கள் கைதேர்ந்தவர்களாக போலீசார் கருதுகின்றனர். இந்தநிலையில் மத்திய பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் தமிழகத்தில் கோவை, சேலம், தர்மபுரி மாவட்டங்களிலும், ஓசூர் பகுதியிலும் பல்வேறு இடங்களில் இந்த கும்பல் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், தர்மபுரி ராஜாஜி நகர் பகுதியைச் சேர்ந்த சரோஜா (வயது60) என்பவர், ஓசூர் வெங்கடேஸ்வரா லேஅவுட் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு கடந்த ஜூன் மாதம் 11-ந் தேதி வந்திருந்தார். அப்போது ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு 'ஹெல்மெட்' அணிந்தவாறு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் சரோஜாவின் கழுத்தில் அணிந்திருந்த 27 பவுன் தங்க நகையை பறித்து சென்று விட்டனர்.

கொள்ளையன் கைது

இது குறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் ஓசூர் டவுன் போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை வலைவீசி தேடிவந்தனர். இந்த நகைப்பறிப்பில் ஈடுபட்டது மும்பையில் வசிக்கும் பிரபல ஈரானிய கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேர் கொண்ட தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடிவந்தனர். இந்நிலையில், கொள்ளையர்கள் மும்பையில் தங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் 2 முறை மும்பை வந்தும் கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திரும்பினர். 3-வது முறையாக மும்பை வந்து ஈரானிய கொள்ளை கும்பலை சேர்ந்த சமீர் சபீர் ஈரானி (வயது 27) என்பவனை, மும்பை ெரயில் நிலையத்தில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஓசூர் அழைத்து சென்று அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் அந்த கொள்ளையனை, 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story