துப்பாக்கி முனையில் நகை, பணம் பறிப்பு- 4 பேருக்கு வலைவீச்சு


துப்பாக்கி முனையில் நகை, பணம் பறிப்பு- 4 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 13 Nov 2022 12:15 AM IST (Updated: 13 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சூதாட்டத்தில் ரூ.60 லட்சம் இழந்த தராவியை சேர்ந்தவரிடம் துப்பாக்கியால் மிரட்டி நகை, பணம் பறித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

மும்பை,

சூதாட்டத்தில் ரூ.60 லட்சம் இழந்த தராவியை சேர்ந்தவரிடம் துப்பாக்கியால் மிரட்டி நகை, பணம் பறித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

ரூ.60 லட்சம்

மும்பை தாராவியை சேர்ந்தவர் கிளாடியஸ். இவரது நண்பரான முஷ்ரப் கான் என்பவருக்கு ரூ.5 ஆயிரம் கடனாக கொடுத்து இருந்தார். இதன்பின்னர் பணத்தை திருப்பி தருவதாக கூறி கிளாடியசை சாந்தாகுருஸ்விற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இதனால் அவர் சாந்தாகுருஸ் கிழக்கு சாஸ்திரி நகருக்கு சென்றார்.

அங்கு முஷ்ரப் கான் மற்றும் வேல்முருகன் உள்ளிட்ட 3 பேர் இருந்தனர். இதையடுத்து கிளாடியசை மதுபானம் குடிக்க அழைத்து சென்றனர். அங்கு வைத்து சூதாடினர். இதில் கிளாடியஸ் ரூ.60 லட்சத்தை இழந்தார். இதனால் ஆன்லைன் கேமில் பணம் ஜெயித்த 4 பேர் கிளாடிசிடம் பணம் தருமாறு கேட்டனர்.

நகை, பணம் பறிப்பு

இதற்கு மறுத்ததால் துப்பாக்கியை காட்டி பணம் கொடுத்தால் உயிருடன் விடுவதாகவும் இல்லையெனில் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர். இதனால் பயந்து போன கிளாடியஸ் வீட்டில் இருந்த நகை, பணத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்து உள்ளார். பாதிக்கப்பட்ட அவர் தாராவி போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் படி போலீசார் நடத்திய விசாரணையில் சம்பவம் நடந்த இடம் சாந்தாகுருஸ் என்பதால் வழக்கை வக்கோலா போலீசாருக்கு மாற்றி விட்டனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நகை, பணம் பறித்த 4 பேர் கும்பலை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story