செல்போன் செயலி மூலம் கடன் வாங்கியவரிடம் ரூ.2 லட்சம் பறிப்பு- கர்நாடகாவை சேர்ந்த 2 பேர் கைது


செல்போன் செயலி மூலம் கடன் வாங்கியவரிடம் ரூ.2 லட்சம் பறிப்பு- கர்நாடகாவை சேர்ந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 18 April 2023 12:15 AM IST (Updated: 18 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆபாச படத்தை பரப்பிவிடுவதாக மிரட்டி செல்போன் செயலி மூலம் கடன் வாங்கியவரிடம் பணம் பறித்த 2 பேர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

ஆபாச படத்தை பரப்பிவிடுவதாக மிரட்டி செல்போன் செயலி மூலம் கடன் வாங்கியவரிடம் பணம் பறித்த 2 பேர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டனர்.

மிரட்டி பணம் பறிப்பு

மும்பை கல்பாதேவி பகுதியை சேர்ந்த 52 வயது நபர் கடன் வழங்கும் செல்போன் செயலி மூலம் கடன் வாங்கி இருந்தார். வாங்கிய கடன்களை சரியான நேரத்தில் திருப்பியும் செலுத்திவிட்டார். இந்தநிலையில் அவரை கடன் செயலி நிறுவன ஊழியர்கள் என கூறி 2 பேர் தொடர்பு கொண்டனர். அவரிடம் கடன் பாக்கி இருப்பதாக கூறினர்.

ஆனால் அந்த நபர் தான் கடனை திருப்பி செலுத்திவிட்டதாக கூறியதை அவர்கள் கேட்கவில்லை. அவர்கள் கேட்கும் பணத்தை கொடுக்கவில்லை எனில் புகைப்படதை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளத்தில் பரப்பிவிடுவோம் என மிரட்டினர். இதற்கு பயந்து 52 வயது நபர் அவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை கொடுத்தார்.

கர்நாடகாவில் கைது

ஒரு கட்டத்தில் பணம் கொடுக்க முடியாததால் அவர் சம்பவம் குறித்து எல்.டி. மார்க் போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், சம்பந்தப்பட்ட நபரை மிரட்டி பணம் பறித்தவர்கள் கர்நாடக மாநிலம் பிஜாப்பூரை சேர்ந்த முகமது அலி சுகாப் ஹியாத் (21), சல்மான் ரியாஸ் (19) என்பது தெரியவந்தது.

இதையடுத்து கர்நாடகம் விரைந்த போலீசார் 2 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.

1 More update

Next Story