போலி ரெயில் டிக்கெட் விற்றவர் பிடிபட்டார்

மும்பை,
மும்பை அந்தேரி சாக்கிநாக்கா பகுதியில் தொலைதூர ரெயில் டிக்கெட் அதிகவிலைக்கு விற்கப்படுவதாக ரெயில்வே விஜிலென்ஸ் படை போலீசாருக்கு புகார் வந்தது. இந்த புகாரின் படி போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் அலிம் என்பவர் முன்பதிவு செய்த டிக்கெட் விற்று வருவதாக தெரியவந்தது. போலீசார் அவரை பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்த ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் மதிப்புள்ள ரெயில் டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதனை சோதனை செய்து பார்த்ததில் அவை அனைத்தும் போலி டிக்கெட் என தெரியவந்தது. அலிமை போலீசார் கைது செய்தனர். இந்த மோசடியில் அப்சல் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. தலைமறைவான அவைரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story






