லிப்ட் பாதை வழியாக விழுந்து தொழிலாளி பலி

4-வது மாடியில் இருந்து லிப்ட் பாதை வழியாக விழுந்து தொழிலாளி பலியனார்.
மாவட்ட செய்திகள்
மும்பை,
அந்தேரி கிழக்கு பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தின் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. சம்பவத்தன்று 4-வது மாடியில் முகமது சேக் (வயது25) என்ற தொழிலாளி கட்டுமான பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். இதில் அவர் எதிர்பாராதவிதமாக லிப்ட் பாதை வழியாக தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த தொழிலாளி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து அந்தேரி எம்.ஐ.டி.சி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் கட்டுமான அதிபர் லிப்ட் பாதையில் தடுப்பு அல்லது பாதுகாப்பு வேலி வைக்கவில்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் தொழிலாளி மரணம் தொடர்பாக கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்த கட்டுமான அதிபரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story






