ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் அதிகாரி கைது.

நவிமும்பை உரண் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பெண் சப்-இன்ஸ்பெக்டர் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது கைது செய்யப்பட்டார்.
தானே,
நவிமும்பை உரண் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், வழக்கு சம்பந்தப்பட்டவரின் மகனிடம் உதவி செய்வதாக கூறி ரூ.50 ஆயிரம் லஞ்சமாக கேட்டு உள்ளார். இதற்கு பணம் தருவதாக கூறிய அவரது மகன் சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் யோசனைப்படி நேற்று முன்தினம் இரவு ரூ.50 ஆயிரத்தை பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் அவர் கொடுத்து உள்ளார். இதனை பெற்றபோது அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பெண் சப்-இன்ஸ்பெக்டரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






