அந்தேரியில் 29 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ


அந்தேரியில்  29 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:17:37+05:30)

மும்பை,

மும்பை அந்தேரியில் லோகண்ட்வாலா வளாகத்தில் உள்ள 29 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் நேற்று அதிகாலை 1.45 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 24-வது மாடியின் பொது இடத்தில் உள்ள மின்வயரில் தீப்பிடித்து கரும்புகை வெளியேறியது. இந்த தீ 23-வது மாடிக்கும் பரவியது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர். அதிகாலை நேரம் என்பதால் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த பலர் திடுக்கிட்டு எழுந்து கட்டிடத்தில் இருந்து கீழே இறங்கினர். கட்டிடத்தில் சிக்கி தவித்த சிலரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இருப்பினும் கரும்புகையால் மூச்சு திணறல் ஏற்பட்டு 4 பேர் மயங்கினர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 85 வயது முதியவர் ஒருவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்து இருக்கலாம் என்று தெரிகிறது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story