முன்னாள் மந்திரி ஜிதேந்திர அவாத் கைது


முன்னாள் மந்திரி ஜிதேந்திர அவாத் கைது
x
தினத்தந்தி 12 Nov 2022 12:15 AM IST (Updated: 12 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

‘ஹர் ஹர் மகாதேவ்' படக்காட்சியை தடுத்து நிறுத்திய விவகாரத்தில் முன்னாள் மந்திரி ஜிதேந்திர அவாத்தை போலீசார் கைது செய்தனர்.

தானே,

'ஹர் ஹர் மகாதேவ்' படக்காட்சியை தடுத்து நிறுத்திய விவகாரத்தில் முன்னாள் மந்திரி ஜிதேந்திர அவாத்தை போலீசார் கைது செய்தனர்.

பார்வையாளர்கள் வெளியேற்றம்

மராட்டியத்தில் 'ஹர் ஹர் மகாதேவ்' என்ற மராத்தி படம் வெளியாகி தியேட்டர்களில் ஓடி வருகிறது. இந்த படத்தில் சத்ரபதி சிவாஜியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் முன்னாள் மந்திரி ஜித்தேந்திர அவாத் குற்றம்சாட்டினார். அவர் கடந்த 7-ந் தேதி இரவு தானேயில் ஹர், ஹர் மகாதேவ் படம் ஓடி தியேட்டருக்குள் ஆதரவாளர்களுடன் நுழைந்தார்.

அவர்கள் தியேட்டரில் படம் பார்த்து கொண்டு இருந்தவர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றினர். மேலும் படத்தை தொடர்ந்து திரையிடவிடாமல் தடுத்தனர். இந்த சம்பவத்தின் போது சில பார்வையாளர்கள் ஜிதேந்திர அவாத் ஆதரவாளர்களால் தாக்கப்பட்ட காட்சிகளும் வெளியாகின. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.

ஜிதேந்திர அவாத் கைது

இந்த நிலையில்நேற்று சம்பவம் தொடர்பாக முன்னாள் மந்திரி ஜிதேந்திர அவாத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 9 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

ஜிதேந்திர அவாத் கைது செய்யப்பட்டதை கண்டித்து நேற்று தானேயில் வர்த்தக்நகர் போலீஸ் நிலையம் முன் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதன்காரணமாக நேற்று அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story