முன்னாள் மத்திய மந்திரி மாணிக்ராவ் காவித் மரணம்


முன்னாள் மத்திய மந்திரி மாணிக்ராவ் காவித் மரணம்
x

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான மாணிக்ராவ் காவித் மரணம்

மும்பை,

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமானகாங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமானமாணிக்ராவ் காவித் முதுமை காரணமாக நேற்று நாசிக் ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். அவருக்கு வயது 87.

மாணிக்ராவ் காவித் பழங்குடியின மக்கள் அதிகம் உள்ள நந்துர்பூர் தொகுதியில் இருந்து தொடர்ந்து 9 முறை எம்.பி.யாக வெற்றி பெற்றவர் ஆவார். இவர் 1980 முதல் 2009 வரை எம்.பி.யாக இருந்து உள்ளார். மேலும் 2004-ல் மன்மோகன் சிங் ஆட்சியின் போது மத்திய உள்துறை இணை மந்திரியாகவும், 2013-ல் மத்திய சமூகநீதி துறை இணை மந்திரியாகவும் இருந்து உள்ளார். இவருக்கு நிர்மலா காவித் என்ற மகளும், பரத் காவித் என்ற மகனும் உள்ளனர்.


Next Story