விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் மோசடி: தனியார் காப்பீடு நிறுவன ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு

விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் மோசடியில் ஈடுபட்ட தனியார் காப்பீடு நிறுவன ஊழியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
மும்பை,
விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் மோசடியில் ஈடுபட்ட தனியார் காப்பீடு நிறுவன ஊழியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
பயிர் காப்பீட்டில் மோசடி
பிரதமர் பசல் பீமா யோஜனா பயிர் காப்பீடு திட்டம் இயற்கை சீற்றங்கள் மற்றும் பூச்சிகள் தாக்குதலால் ஏற்படும் எதிர்பாராத இழப்புகளில் இருந்து விவசாயிகளை பாதுகாக்கிறது. அகோலா மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த பலத்த மழை காரணமாக விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்தனர்.
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டிய ஐ.சி.ஐ.சி.ஐ. லோம்பார்ட் காப்பீடு நிறுவனத்தினர் சேத மதிப்பை குறைத்து காட்டி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
10 ஊழியர்கள் மீது வழக்கு
அவர்கள் அதிகாரிகளின் கையெழுத்தை போட்டு விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய இழப்பீடு ரூ.3 கோடியே 95 லட்சத்து 9 ஆயிரத்து 177-ஐ மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக அகோலா போலீசார் தனியார் காப்பீடு நிறுவனத்தை சேர்ந்த 10 ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.






