சிறுமியை மிரட்டி கூட்டு பலாத்காரம்- 5 பேர் கைது


சிறுமியை மிரட்டி கூட்டு பலாத்காரம்- 5 பேர் கைது
x
தினத்தந்தி 3 April 2023 12:15 AM IST (Updated: 3 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பிம்பிரி சிஞ்ச்வாட்டில் 14 வயது சிறுமியை மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

புனே,

பிம்பிரி சிஞ்ச்வாட்டில் 14 வயது சிறுமியை மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கூட்டு பலாத்காரம்

புனே அருகே உள்ள பிம்பிரி சிஞ்ச்வாட் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்தநிலையில் சம்பவத்தன்று வாலிபர் ஆசைவார்த்தை கூறி சிறுமியை பலாத்காரம் செய்தார். இது பற்றி அறிந்த வாலிபரின் நண்பர்கள் 4 பேர் தங்களிடம் சிறுமியை உல்லாசமாக இருக்க வைக்கும்படி வாலிபரிடம் வற்புறுத்தினர். மேலும் பணம் தருவதாகவும் தெரிவித்தனர்.

இதன்படி வாலிபர் சம்பவத்தன்று சிறுமியை நண்பர்களுக்கு விருந்தாக்க தனியாக அழைத்து வந்துள்ளார். அங்கு வைத்து வாலிபரின் நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து சிறுமியை மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்து உள்ளனர். மேலும் இதுபற்றி யாரிடமும் தெரிவிக்க கூடாது என சிறுமியை மிரட்டி உள்ளனர்.

5 பேர் கைது

இதனால் பயந்து போன சிறுமி இதுபற்றி யாரிடமும் தெரிவிக்கவில்லை. இந்தநிலையில் சில மாதங்கள் கழித்து சிறுமி கர்ப்பமாக இருப்பதாக பெற்றோருக்கு தெரியவந்தது. இது தொடர்பாக பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது, 5 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்த விவகாரம் அம்பலமானது.

இது பற்றி சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 5 பேரையும் கைது செய்தனர்.

1 More update

Next Story