சிவாஜி பார்க்கில் இன்று கவர்னர் கோஷ்யாரி தேசிய கொடி ஏற்றுகிறார்


சிவாஜி பார்க்கில் இன்று கவர்னர் கோஷ்யாரி தேசிய கொடி ஏற்றுகிறார்
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:16:21+05:30)

குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி சிவாஜி பார்க்கில் தேசிய கொடி ஏற்றுகிறார்.

மும்பை,

குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி சிவாஜி பார்க்கில் தேசிய கொடி ஏற்றுகிறார்.

குடியரசு தினவிழா

நாட்டின் குடியரசு தின விழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மராட்டிய அரசு சார்பில் மும்பை சிவாஜி பார்க்கில் குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெறுகிறது.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு குடியரசு தினத்தை வெகு விமரிசையாக முழு அளவில் கொண்டாட முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு ஏற்றபடி பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

கொடி ஏற்றம்

காலை 6 மணிக்கு விழா மேடை அருகே அமைக்கப்பட்டு இருக்கும் தேசிய கொடியை கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி ஏற்றி வைப்பார். அந்த நேரத்தில் தேசிய கீதம் இசைக்கப்படும்.

பின்னர் போலீசார், கடற்படை உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் அணிவகுத்து வந்து கவர்னருக்கு மரியாதை செலுத்துவார்கள். அதை அவர் ஏற்றுக்கொள்வார்.

அதைத்தொடர்ந்து விழா மேடையில் கவர்னர், முதல்-மந்திரி அமர்ந்திருக்க, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பாரம்பரிய நாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.


Next Story