மும்பை-கோவா நெடுஞ்சாலையில் லாரி மீது அரசு பஸ் மோதல்; டோம்பிவிலியை சேர்ந்தவர் சாவு - 28 பயணிகள் காயம்

மும்பை-கோவா நெடுஞ்சாலையில் லாரி மீது அரசு பஸ் மோதல்; டோம்பிவிலியை சேர்ந்தவர் சாவு - 28 பயணிகள் காயம்
x
தினத்தந்தி 18 Sept 2023 12:15 AM IST (Updated: 18 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

மும்பை-கோவா நெடுஞ்சாலையில் லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில் டோம்பிவிலியை சேர்ந்தவர் பலியானார். மேலும் 28 பயணிகள் காயமடைந்தனர்.

மும்பை,

மும்பை-கோவா நெடுஞ்சாலையில் லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில் டோம்பிவிலியை சேர்ந்தவர் பலியானார். மேலும் 28 பயணிகள் காயமடைந்தனர்.

விபத்து

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை யொட்டி கொங்கன் வழித்தடத்தில் செல்லும் ரெயில்கள், பஸ்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மும்பையில் இருந்து ரத்னகிரி நோக்கி மாநில அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. ராய்காட் மாவட்டம் மான்காவை அடுத்த தலேகாவ் கிராம பகுதியில் மும்பை-கோவா நெடுஞ்சாலையில் அதிகாலை 4.30 மணி அளவில் பஸ் வந்த போது சாலையோரம் நின்ற லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.

ஒருவர் பலி; 28 பேர் காயம்

இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த டோம்பிவிலியை சேர்ந்த வினோத் தராலே (வயது 38) என்ற பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவரது மனைவி, வைஷ்ணவி, 15 வயது மகன் ஆதர்வா உள்பட 28 பயணிகள் காயமடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் காயமடைந்த அனைத்து பயணிகளை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story