ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்ட ஜி.எஸ்.டி. சூப்பிரண்டு கைது

மும்பை,
மும்பையில் ஜி.எஸ்.டி. சூப்பிரண்டாக பணிபுரிபவர் சோமேஸ்வர் ராவ். இவர் பழையபொருள் வியாபாரி ஒருவரின் ரூ.1.2 கோடி வரிபாக்கியை சரிசெய்வதற்கு ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் தராவிட்டால் கைது செய்துவிடுவோம் என்று அந்த வியாபாரியை மிரட்டியதாகவும் தெரிகிறது.
பழையபொருள் வியாபாரி கெஞ்சிக்கேட்டதன் பேரில், லஞ்சத்தொகையை ரூ.10 லட்சமாக ஜி.எஸ்.டி. சூப்பிரண்டு சோமேஸ்வர் குறைத்துள்ளார்.
இதுதொடர்பான புகாரின் பேரில் சி.பி.ஐ. ரகசிய விசாரணை நடத்தியது. அதில், குறிப்பிட்ட சூப்பிரண்டு லஞ்சம் கேட்டது உறுதியானது.
அதையடுத்து அவரை சி.பி.ஐ. கைது செய்தது. மும்பையில் உள்ள சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை போலீஸ் காவலில் அனுப்ப உத்தரவிடப்பட்டது.
Next Story






