மும்பையில் நாளை கனமழை


மும்பையில் நாளை கனமழை
x

மும்பையில் நாளை கனமழை பெய்ய இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாவட்ட செய்திகள்

மும்பை,

மும்பையில் நாளை கனமழை பெய்ய இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பலத்த மழை

மும்பையில் கடந்த 11-ந் தேதி பருவ மழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. எனினும் கடந்த 20-ந் நாட்களாக மும்பையில் பலத்த மழை பெய்யவில்லை. லேசான, மிதமான அளவில் தான் மழை பெய்து வந்தது. இதன் காரணமாக மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் 10 சதவீதத்திற்கு கீழ் சென்றது. எனவே 10 சதவீதம் குடிநீர் வெட்டு அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு முதலே நகரில் பரவலாக மழை பெய்தது. இதில் நேற்றும் மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக அந்தோி சப்வே, தாதர் இந்து மாதா, கிங் சர்க்கிள் உள்ளிட்ட பகுதியில் சாலைகளில் மழைநீர் தேங்கியது. வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடி சென்றன. எனினும் மின்சார ரெயில்கள் வழக்கம் போல இயங்கின.

இன்றும் மழை

இந்தநிலையில் நாளை(வெள்ளிக்கிழமை) மும்பை, பால்கர், தானேயில் கனமழை மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதேபோல ராய்காட், ரத்னகிரியில் மிகவும் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதேபோல நாளை மறுநாள் (சனிக்கிழமை) பலத்த மழைக்காக மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.



Next Story