மும்பை, தானேயில் பலத்த மழை- வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

மும்பை, தானேயில் நேற்று பலத்த மழை பெய்தது. தானேயில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
மும்பை,
மும்பை, தானேயில் இன்று பலத்த மழை பெய்தது. தானேயில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
சாலைகளில் வெள்ளம்
மும்பையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று இரவு நகரில் பலத்த மழை பெய்தது. இந்த மழை இன்று காலையும் தொடர்ந்தது. இடைவிடாமல் பெய்த மழையால் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கின. குறிப்பாக அந்தேரி சப்வே, அந்தேரி மார்க்கெட் பகுதி போன்ற தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.
மேலும் முக்கிய சாலைகளிலும் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மும்பை - ஆமதாபாத் நெடுஞ்சாலை, மேற்கு விரைவு சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் ஆமை வேகத்தில் சென்றன. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல மின்சார ரெயில்களும் தாமதமாக இயக்கப்பட்டன. எனினும் சேவைகள் பாதிக்கப்படவில்லை.
வீடுகளுக்குள் தண்ணீர்
இன்று காலை நிலவரப்படி மும்பை நகர் பகுதியில் 3.8 செ.மீ.யும், கிழக்கு புறநகரில் 4.3 செ.மீ.யும், மேற்கு புறநகரில் 3.7 செ.மீ.யும் மழையும் பெய்து உள்ளது.
இதேபோல தானேயிலும் பலத்த மழை பெய்தது. கல்வா காரேகாவ், காகராலி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதேபோல ஸ்ரீரங் விருந்தாவன் ரோடு, சந்தன்வாடி பான்ச்பாகரி, வந்தனா டாக்கீஸ் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. சம்பாஜிநகர் பகுதியில் குடியிருப்பை சூழந்த வெள்ளத்தால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொது மக்கள் அவதி அடைந்தனர்.
----------------






