மும்பை, தானேயில் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த மழை


மும்பை, தானேயில் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த மழை
x

மும்பை, தானேயில் நேற்று பலத்த காற்றுடன் மழை கொட்டி தீா்த்தது.

மும்பை,

மும்பை, தானேயில் நேற்று பலத்த காற்றுடன் மழை கொட்டி தீா்த்தது.

அந்தேரி சப்வே மூடப்பட்டது

மும்பையில் கடந்த ஜூன் மாதம் பருவமழைக்காலம் தொடங்கியது. எனினும் நகரில் கடந்த 2 வாரங்களாக வறண்ட வானிலையே நிலவி வந்தது. இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நகரில் மீண்டும் பருவ மழை தீவிரமடைந்து உள்ளது.

இதில் நேற்று இரவு மும்பையின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. இன்று பலத்த காற்றுடன் மழை கொட்டியது. மேலும் காலையில் கடல் அலையின் சீற்றமும் அதிகமாக இருந்தது. 4.03 மீட்டர் உயரத்திற்கு அலைகள் கரையை தாக்கின. மழை மற்றும் அலை சீற்றம் காரணமாக தாழ்வான இடங்களில் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டது.

சாலைகளில் வெள்ளம் தேங்கியது. இதனால் ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்தேரி சப்வே வெள்ளத்தில் மூழ்கியது. இதன் காரணமாக சப்வே மூடப்பட்டு வாகனங்கள் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டன.

மழை காரணமாக இன்று காலை நேரத்தில் சாலை, தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியதால் பெஸ்ட் பஸ் மற்றும் மின்சார ரெயில்கள் 5 முதல் 15 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

12.3 செ.மீ. மழை

மும்பை புறநகரில் காலை காலை 8 மணி நிலவரப்படி 24 மணி நேரத்தில் 12.3 செ.மீ. மழை பெய்தது. இதில் கடந்த 3 வாரங்களில் புறநகரில் பெய்த அதிகப்பட்ச மழையாகும். இதேபோல நகா்பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 5.5 செ.மீ. மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மும்பை தவிர நவிமும்பை, தானே, டோம்பிவிலி, வசாய், விரார், கல்யாண், தகிசர், போரிவிலி போன்ற பகுதிகளிலும் நேற்று பலத்த மழை பெய்தது. நாளை வரை மும்பை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.



1 More update

Next Story