இந்தி நடிகர் அகில் மிஸ்ரா வீட்டில் தவறி விழுந்து மரணம்
பிரபல இந்தி நடிகர் அகில் மிஸ்ரா வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
மும்பை,
பிரபல இந்தி நடிகர் அகில் மிஸ்ரா வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
அகில் மிஸ்ரா
பிரபல இந்தி நடிகர் அகில் மிஸ்ரா. இவர் 'டான்', 'காந்தி மை பாதர்', 'ஷிகார்' போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அமீர்கானின் 'திரி இடியட்ஸ்' படத்தில் துபே என்ற கதாபாத்திரத்தில் நூலகராக நடித்து பிரபலமானார். இவரது மனைவி சூசான் பெர்னர்டும் நடிகை ஆவார். மும்பையில் உள்ள தனது இல்லத்தில் அகில் மிஸ்ரா, நேற்று சமையலறையில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது உயரமான பெஞ்சில் ஏறிய அவர், நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
சிகிச்சை பலனின்றி மரணம்
இதில் தலையில் பலத்த அடிபட்டது. ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் சில மணி நேரங்களிலேயே சிகிச்சை பலனின்றி அகில் மிஸ்ரா உயிரிழந்தார். அவருக்கு வயது 58. ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த அவரது மனைவி சூசான் உடனடியாக மும்பை திரும்பினார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'என் இதயம் உடைந்தது, என் வாழ்க்கை துணை என்னை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டார்' என்று பதிவிட்டுள்ளார். அகில் மிஸ்ராவின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.