மனைவியை குத்தி கொன்ற கணவர் கைது

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை குத்தி கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார்.
புனே,
புனே ஏரவாடா ஜவான் நகர் பகுதியை சேர்ந்தவர் அனில் மனோகர் (வயது50). இவரது மனைவி அங்கிதா(45). இந்தநிலையில் மனைவி அங்கிதாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் வீட்டிற்கு தாமதமாக வந்த அங்கிதாவிடம் தகராறு செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அனில் மனோகர் அங்கிருந்த கத்தியால் மார்பு, கழுத்தில் சரமாரியாக குத்தினார். இதில் அங்கிதா ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்தார்.
தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று அங்கிதாவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அதிக ரத்தப்போக்கு காரணமாக சிகிச்சை பலனின்றி அங்கிதா உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கணவர் அனில் மனோகரை கைது செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






