எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்காக கார்கேவுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்- சரத்பவார் வாழ்த்து செய்தி


எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்காக கார்கேவுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்- சரத்பவார் வாழ்த்து செய்தி
x
தினத்தந்தி 20 Oct 2022 12:15 AM IST (Updated: 20 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்காக கார்கேவுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன் என சரத்பவார் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

மும்பை,

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்று அந்த கட்சியின் புதிய தலைவராகி உள்ளார்.

இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவர் சரத்பவார் அவரின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மல்லிகார்ஜூன கார்கேவுக்கு எனது வாழ்த்துக்கள். வெற்றிகரமான மற்றும் ஊக்கமளிக்கும் பணிகளை மேற்கொள்ள அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். ஒற்றுமையான எதிரணியை வலுப்படுத்த அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


1 More update

Next Story