பெண்ணை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டிய வழக்கில் கைதான காதலனுக்கு 22-ந் தேதி வரை போலீஸ் காவல் நீட்டிப்பு.

பெண்ணை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டிய வழக்கில் கைதான காதலனுக்கு 22-ந் தேதி வரை போலீஸ் காவல் நீட்டிப்பு.
x
தினத்தந்தி 17 Jun 2023 1:30 AM IST (Updated: 17 Jun 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

மிராரோட்டில் பெண்ணை கொன்று உடலை துண்டு, துண்டாக வெட்டிய வழக்கில் கைதான காதலனுக்கு 22-ந்தேதி வரை போலீஸ் காவலை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

தானே,

மிராரோட்டில் பெண்ணை கொன்று உடலை துண்டு, துண்டாக வெட்டிய வழக்கில் கைதான காதலனுக்கு 22-ந்தேதி வரை போலீஸ் காவலை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

கொடூர கொலை

தானே மாவட்டம் மிராரோடு கீதாநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சரஸ்வதி வைத்யா (வயது32) என்ற பெண்ணை உடன் வசித்து வந்த மனோஜ் சைனி (56) என்பவர் கொடூரமாக கொலை செய்தார். உடலை துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை மறைக்க குக்கரில் வேகவைத்து தெருநாய்களுக்கு உணவாக போட்டார்.

இது தொடர்பாக போலீசார் மனோஜ் சைனியை கைது செய்தனர். இவர் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று வரையில் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் அவரிடம் பல தகவல்கள் பெறப்பட்டு வாக்குமூலமாக பதிவு செய்தனர்.

போலீஸ் காவல் நீட்டிப்பு

விசாரணை காலம் நிறைவு பெற்ற நிலையில் நேற்று மனோஜ் சைனியை மீண்டும் தானே கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மீண்டும் தங்களது காவலில் ஒப்படைக்க கோரி போலீசார் கோர்ட்டில் மனு அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அவருக்கு வருகிற 22-ந்தேதி வரை போலீஸ் காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவரை பலத்த பாதுகாப்புடன் வேனில் அழைத்து சென்றனர். அவரிடம் வழக்கு தொடர்பாக மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

1 More update

Next Story