முதல்-மந்திரி பதவியில் ஷிண்டே நீடிப்பார்- தேவேந்திர பட்னாவிஸ் பேட்டி


முதல்-மந்திரி பதவியில் ஷிண்டே நீடிப்பார்- தேவேந்திர பட்னாவிஸ் பேட்டி
x
தினத்தந்தி 11 May 2023 12:15 AM IST (Updated: 11 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே நீடிப்பார் என தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

மும்பை,

முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே நீடிப்பார் என தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

இன்று தீர்ப்பு

மராட்டிய அரசியல் நெருக்கடி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. இந்த தீர்ப்பு ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக வரும் பட்சத்தில் அவர் முதல்-மந்திரி பதவியை இழக்க நேரிரும் என கூறப்படுகிறது. இதுகுறித்து துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

முட்டாள்களின் அரங்கம்

ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பதவிவிலகுவாரா என்ற விவாதத்தில் எந்த அர்த்தமும் இல்லை. இந்த வார்த்தையை பன்படுத்துவதற்கு வருந்துகிறேன். இதுபோன்ற கேள்விகளை எழுப்புவது முட்டாள்களின் அரங்கம். ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாக தொடர்ந்து இருப்பார். அடுத்த தேர்தலில் அவரது தலைமையில் தான் போட்டியிடுவோம் என்று நான் உங்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும்? இப்படிப்பட்ட எந்த விதமான ஊகங்களையும் முன்வைக்க எந்த அவசியமும் இல்லை. அவர் என்ன தவறு செய்தார்? இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story