நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மராட்டியத்தில் அதிக இடங்களில் வெற்றி பெறுவது தான் முக்கியம்; அஜித்பவார் பேட்டி

நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மராட்டியத்தில் அதிக இடங்களில் வெற்று பெறுவது தான் முக்கியம் என அஜித்பவார் கூறியுள்ளார்.
மும்பை,
நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மராட்டியத்தில் அதிக இடங்களில் வெற்று பெறுவது தான் முக்கியம் என அஜித்பவார் கூறியுள்ளார்.
அதிக இடங்களில் வெற்றி
துணை முதல்-மந்திரி அஜித்பவார் தானேயில் தேசியவாத காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து கூறியதாவது:- வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் மற்றும் மராட்டியத்தில் அதிக இடங்களில் வெற்றி பெறுவதை உறுதி செய்வது தான் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு முக்கியம். கூட்டணி கட்சிகள் அதற்காக தான் தற்போது வேலை செய்து வருகின்றன. நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு தான், மாநில சட்டசபை தேர்தலில் கவனம் செலுத்தப்படும். பலமான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எதிர்க்கட்சிகளை தோற்கடிப்பது தான் எங்கள் நோக்கம்.
மாநில பிரச்சினைகளில் ஆர்வம்
மக்கள் ஆதரவு, நம்பிக்கையை பெற தற்போது பணியாற்றி வருகிறோம். நாட்டில் நடக்கும் பிரச்சினை குறித்து பிரதமர் மோடி, அமித்ஷா பேசியது குறித்து நான் கருத்து கூறமுடியாது. தேசிய தலைவர்கள் பேச்சுக்கு கருத்து கூற நான் இங்கு வரவில்லை. நான் மாநில பிரச்சினைகளில் தான் ஆர்வமாக உள்ளேன். மாநில அளவிலான பிரச்சினைகளை தீர்க்க விரும்புகிறேன். நான் மாநிலத்தை சேர்ந்த சாதாரண கட்சிக்காரன். மாநிலத்தின் வளர்ச்சிக்காக பணியாற்ற விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.






