வாகன விபத்தில் உயிரிழந்த ஐ.டி. ஊழியர் குடும்பத்துக்கு ரூ.1.36 கோடி இழப்பீடு - தீர்ப்பாயம் உத்தரவு


வாகன விபத்தில் உயிரிழந்த ஐ.டி. ஊழியர் குடும்பத்துக்கு ரூ.1.36 கோடி இழப்பீடு - தீர்ப்பாயம் உத்தரவு
x
தினத்தந்தி 30 Aug 2023 12:45 AM IST (Updated: 30 Aug 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

வாகன விபத்தில் உயிரிழந்த ஐ.டி. ஊழியரின் குடும்பத்துக்கு ரூ.1.36 கோடி இழப்பீடு வழங்க தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது

தானே,

தானேயை சேர்ந்தவர் அரவிந்த். ஐ.டி. நிறுவன ஊழியர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு மும்பை- ஆக்ரா நெடுஞ்சாலையில் சாகாப்பூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது எதிரே வந்த ஜீப் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அரவிந்த் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பலியானார். இதனால் பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினர் ரூ.2 கோடி இழப்பீடு கேட்டு வாகன உரிமையாளரிடம் முறையிட்டனர். இதற்கு அவர் மறுத்ததால் மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரின் கவனக்குறைவினால் தான் விபத்து ஏற்பட்டதாக காப்பீடு நிறுவனம் சார்பில் வைக்கப்பட்ட வாதத்தை தீர்ப்பாயம் ஏற்க மறுத்தது. விபத்தின் போது சாலையில் போக்குவரத்தை கவனிக்காமல் அவசரமாகவும், கவனக்குறைவாகவும் ஜீப்பை ஓட்டி சென்றது நிரூபணமானது. இதனால் ஜீப் வாகன உரிமையாளர், அதன் காப்பீடு நிறுவனம் இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வட்டியுடன் சேர்த்து ரூ.1 கோடியே 36 லட்சம் வழங்க வேண்டும் என தீர்ப்பாயம் உத்தரவிட்டது.


Next Story