சுற்றுலாவுக்காக மராட்டியத்தில் உள்ள யூதர்கள் தொடர்புடைய இடங்கள் மேம்படுத்தப்படும்- மங்கல் பிரதாப் லோதா தகவல்

சுற்றுலாவுக்காக மாநிலத்தில் உள்ள யூதர்கள் தொடர்புடைய இடங்கள் மேம்படுத்தப்படும் என சுற்றுலா துறை மந்திரி மங்கல் பிரதாப் லோதா கூறியுள்ளார்.
மும்பை,
சுற்றுலாவுக்காக மாநிலத்தில் உள்ள யூதர்கள் தொடர்புடைய இடங்கள் மேம்படுத்தப்படும் என சுற்றுலா துறை மந்திரி மங்கல் பிரதாப் லோதா கூறியுள்ளார்.
கையெழுத்து
மராட்டியத்தில் யூதர்கள் தொடர்பான பழமையான இடங்கள் பல உள்ளன. குறிப்பாக கொங்கன் பகுதியில் பல நூற்றாண்டுகளாக யூதர்கள் அதிகளவில் வசித்தனர். இந்தநிலையில் சுற்றுலாவுக்காக மாநிலத்தில் உள்ள யூதர்கள் தொடர்புடைய இடங்கள் மேம்படுத்தப்படும் என மாநில சுற்றுலா துறை மந்திரி மங்கல் பிரதாப் லோதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் இஸ்ரேல் தூதரக அதிகாாிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் யூதர்கள் தொடர்புடைய பகுதிகளை சுற்றுலாவுக்காக மேம்படுத்துவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.
மேம்படுத்தப்படும்
மேலும் இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
மாநிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் மராட்டியம் யூதர்கள் நினைவு இடங்கள், மற்ற இடங்களை பாதுகாக்கும். யூதர்கள் பல நூற்றாண்டுகளாக நமது சமூகத்தில் அங்கம் வகிக்கின்றனர். அவர்களில் பலர் நம் கலாசாரத்தையும் மொழியையும் ஏற்றுக்கொண்டனர்.
மும்பை, தானே, புனே மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் சில முக்கிய யூத கட்டமைப்புகள் உள்ளன, அவை இந்த சுற்றுலா திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






