கர்நாடக முதல்-மந்திரி பதவி ஏற்பு விழா: சரத்பவார், உத்தவ் தாக்கரேக்கு அழைப்பு
கர்நாடக முதல்-மந்திரி பதவி ஏற்பு விழா: சரத்பவார், உத்தவ் தாக்கரேக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மும்பை,
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து உள்ளது. அந்த கட்சியை சேர்ந்த சித்தராமையா முதல்-மந்திரியாகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல்-மந்திரியாகவும் இன்று (சனிக்கிழமை) பெங்களூருவில் நடைபெறும் விழாவில் பதவி ஏற்க உள்ளனர். விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மராட்டியத்தில் மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விழாவில் கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே 2 தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. பதவி ஏற்பு விழாவில் சரத்பவார் கலந்து கொள்ள உள்ளார் என தேசியவாத காங்கிரஸ் உறுதிப்படுத்தி உள்ளது. உத்தவ் தாக்கரே கலந்து கொள்வது தொடர்பாக அந்த கட்சி தரப்பில் எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.








