கேதார் திகேவுக்கு போலீசார் சம்மன்


கேதார் திகேவுக்கு போலீசார் சம்மன்
x

பெண்ணை மிரட்டிய வழக்கில் கேதார் திகேவுக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

மும்பை,

மத்திய மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் எம்.எம்.ஜோஷி மார்க் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். இந்த புகாரில் டெல்லியை சேர்ந்த ரோகித் கபூர் என்பவர் ஜந்து நட்சத்திர ஓட்டலில் வைத்து தன்னை கற்பழித்ததாக குற்றம் சாட்டினார். மேலும் இந்த சம்பவத்தை யாரிடம் தெரிவிக்கக்கூடாது என தன்னை மிரட்டியதாக தானே மாவட்ட சிவசேனா தலைவராக நியமிக்கப்பட்ட கேதார் திகே மீது நடவடிக்கை எடு்க்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

இது குறித்து போலீசார் கேதார் திகே மீது வழக்கு பதிவு செய்தனர். விசாரணைக்கு ஆஜராகுமாறு நேற்று போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பினர். தானே சிவசேனா தலைவராக உத்தவ் தாக்கரேவால் நியமிக்கப்பட்ட மறைந்த ஆனந்த் திகேவின் மருமகன் கேதார் திகே என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story