முன்னாள் ராணுவ வீரருக்கு ஆயுள் தண்டனை- அலிபாக் கோர்ட்டு தீர்ப்பு


முன்னாள் ராணுவ வீரருக்கு ஆயுள் தண்டனை- அலிபாக் கோர்ட்டு தீர்ப்பு
x

கடன் கொடுத்ததை திருப்பி கேட்ட பெண்ணை கடத்தி கொலை செய்த முன்னாள் ராணுவ வீரருக்கு ஆயுள் தண்டனை விதித்து அலிபாக் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

மாவட்ட செய்திகள்

மும்பை,

கடன் கொடுத்ததை திருப்பி கேட்ட பெண்ணை கடத்தி கொலை செய்த முன்னாள் ராணுவ வீரருக்கு ஆயுள் தண்டனை விதித்து அலிபாக் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

முன்னாள் ராணுவ வீரர்

ராய்காட் மாவட்டம் அலிபாக்கை சேர்ந்தவர் கணேஷ் மாத்ரே (வயது56). முன்னாள் ராணுவ வீரர். கடந்த 2018-ம் ஆண்டு இந்தப்பூரில் தொலைபேசி கடை வைத்து நடத்தி வந்த பாக்யஸ்ரீ பவார் என்ற பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. கணேஷ் மாத்ரேவிற்கு சொந்தமான நந்தாய்பாடா பண்ணை வீட்டில் கட்டுமான பணிகள் மேற்கொள்வதாக கூறி அப்பெண்ணிடம் கடன் வாங்கி இருந்தார்.

ஆனால் அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் இருந்தார். இதனால் பாக்யஸ்ரீ பவார் கடனை திருப்பி கேட்டு வந்தார்.

பெண் கடத்தி கொலை

அதே ஆண்டில் ஏப்ரல் மாதம் 13-ந்தேதி கணேஷ் மாத்ரே பணம் தருவதாக கூறி பென் தாலுகா ஹம்ராபூர் பாட்டா அருகே வாட்கல் என்ற இடத்திற்கு தன்னுடன் வரும்படி பாக்யஸ்ரீ பவாரை அழைத்தார். இதனை நம்பிய பாக்யஸ்ரீ அவருடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.

மாங்குரோவ் காட்டு பகுதிக்கு சென்றபோது மோட்டார் சைக்கிளை நிறுத்திய கணேஷ் மாத்ரே உடன் வந்த பாக்யஸ்ரீ பவாரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்தார். உடலை மாங்குரோவ் காட்டில் வீசிவிட்டு கொலை செய்த ஆதாரங்களை அழித்தார்.

ஆயுள் தண்டனை

இதற்கிடையில் பாக்யஸ்ரீ பவார் காணாமல் போனதாக குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். இதில் கணேஷ் மாத்ரேவுடன் மோட்டார் சைக்கிளில் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் பணம் கேட்டு துன்புறுத்தியதால் அவரை கடத்தி கொலை செய்து உடலை காட்டில் வீசியதாக ஒப்புக்கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து அலிபாக் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணை நிறைவில் அவர் மீதான குற்றம் நிரூபணமானது. இதனை தொடர்ந்து அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

1 More update

Next Story