மத்திய ரெயில்வே வழித்தடத்தில் பராமரிப்பு பணி- 7-ந்தேதி மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்


மத்திய ரெயில்வே வழித்தடத்தில் பராமரிப்பு பணி- 7-ந்தேதி மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
x

பராமரிப்பு பணி காரணமாக மத்திய ரெயில்வே வழித்தடத்தில் 7-ந்தேதி மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மத்திய ரெயில்வே வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக 7-ந்தேதி மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாட்டுங்கா - முல்லுண்டு

மத்திய ரெயில்வே வழித்தடத்தில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.05 மணி முதல் மாலை 4.05 மணி வரை மாட்டுங்கா - முல்லுண்டு இடையே விரைவு வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 10.25 மணி முதல் பிற்பகல் 3.35 மணி வரை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து புறப்படும் விரைவு ரெயில் அனைத்தும் மாட்டுங்கா - முல்லுண்டு இடையே ஸ்லோ வழித்தடத்தில் இயக்கப்பட்டு அனைத்து வழித்தடங்களிலும் நின்று செல்லும். தானேக்கு பிறகு இந்த ரெயில்கள் மீண்டும் விரைவு வழித்தடத்தில் இயக்கப்படும்.

இதேபோல சி.எஸ்.எம்.டி. நோக்கி வரும் விரைவு ரெயில்களும் முல்லுண்டு - மாட்டுங்கா இடையே ஸ்லோ வழித்தடத்தில் இயக்கப்படும்.

சேவை ரத்து

துறைமுக வழித்தடத்தில் காலை 11.05 மணி முதல் மாலை 4.05 மணி வரை பன்வெல் - வாஷி இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே நாளை மறுநாள் காலை முதல் மாலை வரை சி.எஸ்.எம்.டி. - பன்வெல் இடையே மின்சார ரெயில் சேவை இருக்காது. இதேபோல தானே - பன்வெல் இடையேயும் ரெயில் சேவை இருக்காது. எனினும் பராமரிப்பு பணிகள் நடைபெறும் நேரத்தில் சி.எஸ்.எம்.டி. - வாஷி, தானே - வாஷி, நெருல் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

இந்த தகவலை மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ளது.


Next Story