'இந்தியா' கூட்டணி கூட்டத்தில் நெற்றியில் திலகமிட மறுத்த மம்தா பானர்ஜி
‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில் மம்தா பானர்ஜி நெற்றியில் திலகமிட மறுத்ததால் பரபரப்பு
மும்பை,
மும்பையில் 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் கூட்டம் நேற்று தொடங்கியது. நேற்று மாலை கிராண்ட் ஹயாத் ஓட்டலில் நடந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தலைவர்களுக்கு நெற்றியில் திலகமிட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை வரவேற்ற பெண் ஒருவர் அவருக்கு நெற்றியில் திலகமிட முயன்றார். ஆனால் மம்தா பானர்ஜி நெற்றியில் திலகமிட மறுத்துவிட்டார்.
இந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. நெற்றியில் திலகமிட மறுத்த மம்தா பானர்ஜிக்கு பா.ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story