போலி தங்க பிஸ்கெட் கொடுத்து ரூ.10 லட்சம் நகைகள் மோசடி செய்தவர் கைது


போலி தங்க பிஸ்கெட் கொடுத்து ரூ.10 லட்சம் நகைகள் மோசடி செய்தவர் கைது
x

போலி தங்க பிஸ்கெட்டை கொடுத்து ரூ.10 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

மாவட்ட செய்திகள்

மும்பை,

போலி தங்க பிஸ்கெட்டை கொடுத்து ரூ.10 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

தங்க பிஸ்கெட்

மும்பை பைதோனியில் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நகைக்கடை உரிமையாளருக்கு அண்மையில் செல்போனில் அழைப்பு ஒன்று வந்தது.

அதில் பேசிய நபர் தன்னிடம் 24 காரட் தங்க பிஸ்கெட் இருப்பதாகவும், இதற்கு பதிலாக 22 காரட் எடையுள்ள தங்க நெக்லஸ் தரும்படி தெரிவித்தார். இதனை நம்பிய கடை உரிமையாளர் அந்த நபரை கடைக்கு வரும்படி தெரிவித்தார். இதன்படி கடைக்கு வந்த 42 வயதுடைய நபர் ஒருவர் தான் வைத்திருந்த தங்க பிஸ்கெட்டை உரிமையாளரிடம் கொடுத்தார்.

இதனை எடை பார்த்த பின்னர் உரிமையாளர் 200 கிராம் கொண்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கநெக்லஸ்சை கொடுத்து அனுப்பினார்.

மோசடி நபர் கைது

பின்னர் தங்க பிஸ்கெட்டை பட்டறை ஊழியரிடம் கொடுத்து அனுப்பினார். அங்கு தங்க பிஸ்கெட்டை உரசி பார்த்தபோது அது போலியானது என தெரியவந்தது. வெள்ளியால் தயாரிக்கப்பட்ட பிஸ்கெட்டை தங்கநிறத்திலான வண்ணம் பூசி மர்ம நபர் ஏமாற்றி சென்றது தெரியவந்தது. இது பற்றி கடை உரிமையாளர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையில் போலி தங்க பிஸ்கெட் கொடுத்து மோசடி செய்தவரின் அடையாளம் தெரியவந்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவருடன் தொடர்புடைய மற்றவர்களை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story