மராத்தியில் எம்.பி.பி.எஸ். பாட புத்தகம் தயாரிக்க 7 பேர் அடங்கிய கமிட்டி- மாநில அரசு அமைத்தது


மராத்தியில் எம்.பி.பி.எஸ். பாட புத்தகம் தயாரிக்க 7 பேர் அடங்கிய கமிட்டி- மாநில அரசு அமைத்தது
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 24 Nov 2022 6:45 PM GMT)

மராத்தி மொழியில் எம்.பி.பி.எஸ். பாட புத்தகம் தயாரிக்க 7 பேர் அடங்கிய கமிட்டியை மாநில அரசு அமைத்து உள்ளது.

மும்பை,

மராத்தி மொழியில் எம்.பி.பி.எஸ். பாட புத்தகம் தயாரிக்க 7 பேர் அடங்கிய கமிட்டியை மாநில அரசு அமைத்து உள்ளது.

7 பேர் கமிட்டி

மத்திய பிரதேச அரசு சமீபத்தில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பை படிக்க இந்தி புத்தகங்களை அறிமுகம் செய்தது. இந்தநிலையில் மராட்டிய மாநில அரசும் மராத்தி மொழியில் எம்.பி.பி.எஸ். பாட புத்தகங்களை தயார் செய்வது தொடர்பாக 7 பேர் அடங்கிய கமிட்டியை அமைத்து உள்ளது.

இதுதொடர்பாக மாநில மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

உறுப்பினர்கள் கூட்டம்

மராத்தி மொழியில் எம்.பி.பி.எஸ். பாட புத்தகங்களை தயாரிப்பது தொடர்பாக மாநில மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி துறை இணை இயக்குனர் அஜய் சந்தன்வாலே தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

மராத்தி மொழியில் எம்.பி.பி.எஸ். பாட புத்தகங்களை தயாரிப்பது தொடர்பாக இந்தியில் அந்த புத்தகங்களை வெளியிட்ட மத்திய பிரதேச மாநில அதிகாரிகளிடம் பேசினோம்.

இதையடுத்து மராத்தி மொழியில் பாட புத்தகங்களை தயாரிப்பதற்காக மாநில அரசு அமைத்து உள்ள கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்த உள்ளோம். இந்த கூட்டம் அடுத்த வாரம் மும்பையில் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story