மந்திரி அனில் பரப் சிறை செல்ல தயாராக இருக்க வேண்டும்- கிரித் சோமையா கூறுகிறார்

மந்திரி அனில் பரப் சிறை செல்ல தயாராக இருக்க வேண்டும் என்று பா.ஜனதா முன்னாள் எம்.பி. கிரித் சோமையா கூறினார்.
மும்பை,
மந்திரி அனில் பரப் சிறை செல்ல தயாராக இருக்க வேண்டும் என்று பா.ஜனதா முன்னாள் எம்.பி. கிரித் சோமையா கூறினார்.
சோதனை
சிவசேனாவை சேர்ந்த போக்குவரத்து துறை மந்திரி அனில் பரப் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் தற்போது புதிய வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் மந்திரி அனில் பரப் வசித்து வரும் மும்பை பாந்திராவில் உள்ள அரசு பங்களாவில் இன்று அதிரடி சோதனை நடத்தினர். மேலும் ரத்னகிரி மாவட்டம் தபோலி, புனே உள்பட மொத்தம் 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது.
இந்தநிலையில் பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் எம்.பி. கிரித் சோமையா அமலாக்கத்துறையின் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:-
தயாராக இருக்க வேண்டும்
முன்னாள் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக், மந்திரி நவாப் மாலிக் ஆகியோருக்கு பிறகு, 3-வதாக மந்திரி அனில் பரப் சிறைக்கு செல்ல தனது பைகளை மூட்டை கட்டி வைத்து கொள்ள வேண்டும்.
விசாரணை அமைப்பு இந்த ஒரு வழக்கை மட்டும் இல்லாமல் அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் விசாரிக்கும் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






