12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கில வினாத்தாளில் குளறுபடி- அதிகாரி விளக்கம்


12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கில வினாத்தாளில் குளறுபடி- அதிகாரி விளக்கம்
x
தினத்தந்தி 23 Feb 2023 12:15 AM IST (Updated: 23 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மும்பை,

மராட்டியத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. 3 ஆயிரத்து 195 மையங்களில் நடக்கும் இந்த தேர்வை 14 லட்சத்திற்கு அதிகமாக மாணவர்கள் எழுதினர். இந்த நிலையில் நேற்று நடந்த ஆங்கில வினாத்தாளில் கேள்விக்கு பதிலாக மாதிரி விடையின் ஒரு பகுதி அச்சிட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது பற்றி மராட்டிய மாநில மேல்நிலை கல்வி வாரியத்தின் தலைவர் கூறுகையில், "கேள்வித்தாள் அச்சிடுவதில் பிழை இருப்பதை ஒப்புக்கொள்கிறேன். மேலும் மாணவர்களின் நலன் கருதி தேவையான முடிவு எடுக்கப்படும். பொதுவாக இது போன்ற சந்தர்ப்பங்களில் கேள்விக்கு ஒதுக்கப்பட்ட மதிப்பெண்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும்" என்றார்.

1 More update

Next Story