துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட கும்பல் மீது மோக்கா சட்டம் பாய்ந்தது

அம்பர்நாத்தில் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட கும்பல் மீது போலீசார் மோக்கா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
அம்பர்நாத்,
அம்பர்நாத்தில் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட கும்பல் மீது போலீசார் மோக்கா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
துப்பாக்கியால் சுட்டு சண்டை
தானே மாவட்டம் அம்பர்நாத் பகுதியில் உள்ள பெனோலி கிராமத்தில் மாட்டு வண்டி பந்தயம் தொடர்பாக 2 தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஒரு கும்பல் மற்றொரு தரப்பினர் மீது துப்பாக்கியால் சுட்டதாக கூறப்பட்டது.
இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 33 பேர் மீது மோக்கா சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
மோக்கா சட்டத்தில் வழக்கு
இதுதொடர்பாக போலீஸ் கூடுதல் கமிஷனர் தத்தாரே ஷிண்டே கூறுகையில், "அம்பர்நாத்தில் உள்ள பெனோலி கிராமத்தில் மாட்டு வண்டி பந்தயம் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ராய்காட்டை சேர்ந்த குற்றவாளி மற்றும் அவரது கூட்டாளிகள் அடிவிலியை சேர்ந்த ராகுல் பாட்டீல், அவரது ஆதரவாளாகள் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளனர். மேலும் அங்கு இருந்த வாகனங்களை சேதப்படுத்தி உள்ளனர்.
இந்த வழக்கில் 33 பேர் மீது மோக்கா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளோம். 10 பேரை இதுவரை கைது செய்து உள்ளோம். மீதமுள்ள 23 பேரை தேடி வருகிறோம் " என்றார்.






