மும்பையில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு


மும்பையில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
x

மும்பையில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மும்பை,

மும்பையில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இரவில் பெய்த மழை

மும்பையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மும்பையில் இன்னும் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறிய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்து இருந்தது.

அதன்படி நேற்று இரவில் மும்பையில் பலத்த பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. ஆனால் காலையில் மழையின் தீவிரம் குறைந்ததால் தேங்கி இருந்த வெள்ளம் வடிந்தது. நகரில் ரெயில்கள் மற்றும் சாலை போக்குவரத்து வழக்கம் போல் இயங்கியது.

24 மணி நேரத்தில் கனமழை

அடுத்த 24 மணி நேரத்தில் மும்பை மற்றும் புறநகர் பகுதியில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மழையின் காரணமாக இன்று அரபிக்கடலில் பிற்பகல் 2.12 மணி அளவில் 4.18 மீட்டர் உயரத்திற்கு கடல் அலை சீற்றம் காணப்பட்டது. இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த அதாவது 24 மணி நேரத்தில் மும்பையில் 4.1 செ.மீ மழையும், கிழக்கு மற்றும் மேற்கு புறநகர் பகுதிகளில் முறையே 3.98 செ.மீ மற்றும் 3.94 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

1 More update

Next Story