மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி திபான்கர் தத்தா சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஆகிறார்- கொலீஜியம் பரிந்துரை


மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி திபான்கர் தத்தா சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஆகிறார்- கொலீஜியம் பரிந்துரை
x
தினத்தந்தி 27 Sep 2022 6:45 PM GMT (Updated: 27 Sep 2022 6:45 PM GMT)

மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி திபான்கர் தத்தாவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க வேண்டும் என கொலீஜியம் பரிந்துரை செய்து உள்ளது.

மும்பை,

மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி திபான்கர் தத்தாவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க வேண்டும் என கொலீஜியம் பரிந்துரை செய்து உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை

சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் (மூத்த நீதிபதிகள் குழு) கூட்டம் நேற்று முன்தினம் தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி திபான்கர் தத்தாவை, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை செய்தது.

கொல்கத்தா ஐகோர்ட்டில் மூத்த நீதிபதியாக இருந்த திபான்கர் தத்தா 2020-ம் ஆண்டு ஏப்ரல் 28-ந் தேதி மும்பை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய பிறகு அவர் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் நீதிபதி மகன்

கொல்கத்தா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதியான சாலில் குமார் தத்தாவின் மகனான திபான்கர் தத்தா 1965-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிறந்தவர் ஆவார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் 1989-ம் ஆண்டு சட்டம் படித்து முடித்த இவர், அதே ஆண்டில் வக்கீலாக பணிபுரிய பதிவு செய்து உள்ளார்.

மேலும் ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் பல முக்கிய வழக்குகளில் வாதாடி உள்ளார். மத்திய அரசின் வக்கீலாக 1998 முதல் பணியாற்றி உள்ளார். 2006-ம் ஆண்டு ஜூன் மாதம் கொல்கத்தா ஐகோர்ட்டில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.


Next Story