மும்பை - நாகர்கோவில் ரெயிலை தினமும் இயக்க வேண்டும்; ரெயில் பயணிகள் நல சங்கம் கோரிக்கை


மும்பை - நாகர்கோவில் ரெயிலை தினமும் இயக்க வேண்டும்; ரெயில் பயணிகள் நல சங்கம் கோரிக்கை
x
தினத்தந்தி 8 Oct 2023 1:15 AM IST (Updated: 8 Oct 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

மும்பை - நாகர்கோவில் ரெயிலை தினமும் இயக்க வேண்டும் என ரெயில் பயணிகள் நல சங்கம் கோரிக்கை வைத்துள்ளது

மும்பை,

மும்பை தமிழின ரெயில் பயணிகள் நல சங்கம் சார்பில் தலைவர் அண்ணாமலை, பொதுச்செயலாளர் அப்பாதுரை, ஆலோசகர் கே.வி. அசோக்குமார் ஆகியோர் மத்திய ரெயில்வே மூத்த அதிகாரி எஸ்.எஸ். குப்தா மற்றும் தலைமை பயணிகள் போக்குவரத்து மேலாளர் சரத் சந்திராயனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், மும்பை - நாகர்கோவில் எக்ஸ்பிரசை (16339) மீண்டும் தர்மாவரம், கிருஷ்ணராஜபுரம் வழியாக வாரத்தில் 4 நாட்கள் என இல்லாமல் தினந்தோறும் இயக்க வேண்டும், புனே - கன்னியாகுமரி ரெயிலை மீண்டும் மும்பை - கன்னியாகுமரி இடையே இயக்க வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மும்பை-தூத்துக்குடி மற்றும் எல்.டி.டி. - கன்னியாகுமரி சிறப்பு ரெயிலை, நிரந்தர ரெயிலாக இயக்க வேண்டும், மும்பையில் இருந்து சென்னை மற்றும் தென் தமிழகத்துக்கு சதாப்தி போன்ற அதிவிரைவு ரெயில்களை இயக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.


Next Story