மும்பை- புனே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் புகையால் பரபரப்பு- தீ விபத்து தவிர்ப்பு

மும்பை-புனே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்பட்ட திடீர் புகை காரணமாக சேலார்வாடி ரெயில் நிலையத்தில் நிறுத்தி அணைக்கப்பட்டது. இதனால் ரெயில் தீ விபத்தில் இருந்து தப்பியது.
மும்பை,
மும்பை-புனே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்பட்ட திடீர் புகை காரணமாக சேலார்வாடி ரெயில் நிலையத்தில் நிறுத்தி அணைக்கப்பட்டது. இதனால் ரெயில் தீ விபத்தில் இருந்து தப்பியது.
ரெயில் நிறுத்தம்
மும்பையில் இருந்து புனே நோக்கி இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று புறப்பட்டு சென்றது. புனே அருகே சேலார்வாடி ரெயில் நிலையம் அருகே ரெயில் சென்ற போது என்ஜினில் இருந்து 4-வது பெட்டியின் அடிப்பகுதியில் இருந்து புகை வெளிவந்ததை ரெயில்வே மேலாளர் கண்டார்.
உடனே சிவப்பு கொடியை காண்பித்து ரெயிலை நிறுத்தி உள்ளார். பின்னர் சம்பவம் குறித்து தீயணைப்பு படையினருக்கு தெரிவிக்கப்பட்டது.
பிரேக்கில் தொழிற்நுட்ப கோளாறு
இதன்பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். இதில் ரெயில் சக்கரத்தின் அருகே பிரேக் எந்திர பகுதியில் புகை வெளிவந்ததாக தெரியவந்தது. இதையடுத்து தீயணைப்பு படையினர் புகையை அணைத்தனர். இதனால் ரெயில் தீ விபத்தில் இருந்து தப்பியது.
ரெயில்வே ஊழியர்கள் எந்திரத்தை சரிசெய்த பின்னர் ரெயில் அங்கிருந்து தாமதமாக புறப்பட்டு சென்றதாக புனே ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி மனோஜ் ஜவகர் தெரிவித்து உள்ளார்.
-----------------






