மும்பையில் புதிதாக கொரோனா பதிவாகவில்லை


மும்பையில் புதிதாக கொரோனா பதிவாகவில்லை
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:16:48+05:30)

மும்பை,

மும்பையில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் முறையாக கொரோனா தொற்று அடியெடுத்து வைத்தது. அதன்பிறகு நெருக்கம் மிகுந்த மும்பை நகரையே உலுக்கி எடுத்த தொற்றின் பாதிப்பு மக்களை வறுத்து எடுத்தது. சமீபகாலமாக கொரோனா மெல்ல மெல்ல சரிவை சந்தித்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மும்பை நகரில் புதிதாக யாருக்கும் கொரோனா பதிவாகவில்லை.

மும்பையில் முதல் முறையாக 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் அன்று 2 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. அதன்பிறகு 2 ஆண்டுகள், 10 மாதங்கள், 14 நாட்களுக்கு பிறகு நகரில் நேற்று முன்தினம் முதன்முறையாக கொரோனா பாதிப்பு யாருக்கும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையில் இதுவரை கொரோனா தொற்றால் 11 லட்சத்து 55 ஆயிரத்து 240 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் 19 ஆயிரத்து 747 பேர் தொற்றுக்கு ஆளாகி இறந்துள்ளனர்.


Next Story