மதுபான பாரில் ஆபாச நடனம்- 11 பேர் கைது


மதுபான பாரில் ஆபாச நடனம்- 11 பேர் கைது
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:15:22+05:30)

தானே,

தானே மாவட்டம் பயந்தர் கோட்தேவ் பகுதியில் உள்ள மதுக்கடை ஒன்றில் சட்டவிரோத நடவடிக்கைகள் நடந்து வருவதாக மிராபயந்தர்-வசாய்விரார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் அழகிகளின் ஆபாச நடனம் நடந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மதுபான பார் மேலாளர், காசாளர், பாடகர் உள்பட 11 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரத்து 520 ரொக்கம் மற்றும் நடன வீடியோ கிளிப் போன்றவை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மதுபான உரிமையாளர் உள்பட பலரை தேடி வருகின்றனர்.


Next Story