ஆர்கெஸ்ட்ரா பாரில் ஆபாசம்; 36 பேர் மீது வழக்குப்பதிவு


ஆர்கெஸ்ட்ரா பாரில் ஆபாசம்; 36 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 18 Sept 2023 1:30 AM IST (Updated: 18 Sept 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

பன்வெல் பகுதியில் உள்ள ஆர்கெஸ்ட்ரா பாரில் சட்டவிரோதமாக ஆபாச செயல்கள் நடத்தியது தொடர்பாக 36 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

நவிமும்பை,

ராய்காட் மாவட்டம் பன்வெல் பகுதியில் ஆர்கெஸ்ட்ரா பாரில் சட்டவிரோத ஆபாச செயல்கள் நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவத்தன்று இரவு அந்த பாரில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஆபாச பாடல், ஆடல் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இதையடுத்து போலீசார் பாடகர்கள், உரிமையாளர்கள், பணியாளர்கள், மேலாளர்கள் ஆகிய 22 ஊழியர்கள் உள்பட 36 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story