மராட்டியத்தில் விசித்திரம்: ஒரே கட்சியில் ஒருவர் முதல்-மந்திரி, மற்றொருவர் எதிர்க்கட்சி தலைவர்


மராட்டியத்தில் விசித்திரம்: ஒரே கட்சியில் ஒருவர் முதல்-மந்திரி, மற்றொருவர் எதிர்க்கட்சி தலைவர்
x

மராட்டியத்தில் ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் முதல்-மந்திரி, எதிர்க்கட்சி தலைவராக உள்ள விசித்திரம் நடந்து உள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் முதல்-மந்திரி, எதிர்க்கட்சி தலைவராக உள்ள விசித்திரம் நடந்து உள்ளது.

கட்சியில் பிளவு

மராட்டியத்தில் சிவசேனா தலைமையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாவிகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே, கட்சி தலைமைக்கு எதிராக 40 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் அதிருப்தி அணியை உருவாக்கினார். மேலும் அவர் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சியை பிடித்தார்.

தற்போது சிவசேனா அதிருப்தி அணித்தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாகவும், பா.ஜனதாவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாக உள்ளனர்.

முதல்-மந்திரி, எதிர்க்கட்சி தலைவர்

இந்தநிலையில் பா.ஜனதா ஆளுங்கட்சியாக மாறியதால் மராட்டிய மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் பதவி காலியானது. அந்த பதவிக்கு சிவசேனா சார்பில் அம்பா தாஸ் தான்வே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து மராட்டியத்தில் ஒரே கட்சியை சேர்ந்த ஒருவர் முதல்-மந்திரியாகவும், மற்றொருவர் எதிர்க்கட்சி தலைவராகவும் ஆன அரிய நிகழ்வு நடந்து உள்ளது. அதே நேரத்தில் 2 பேரும் வெவ்வேறு அணிகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மராட்டிய மேல்-சபையில் பா.ஜனதாவின் பலம் 24 ஆக உள்ளது. இதையடுத்து சிவசேனாவுக்கு 12 எம்.எல்.சி.கள் உள்ளனர். காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுக்கு தலா 10 எம்.எல்.சி.க்கள் உள்ளனர். இதுதவிர லோக் பாரதி, உழைப்பாளர், உழவர் கட்சி, ராஷ்ட்ரிய சமாஜ் பக்சா கட்சிகளுக்கு தலா ஒரு உறுப்பினரும், 4 சுயேச்சைகளும், 15 இடங்கள் காலியாக உள்ளன.

1 More update

Next Story